ரி-20 வரலாற்றில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்….!

சர்வதேச ரி – 20 கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை பதிவுசெய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் நியூசிலாந்து வீரர் டிம் சவுத்தி.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் விளையாடுகிறது

நேற்று நடைபெற்ற போட்டியில் 4 ஓவர்களில் 25 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டிம் சவுத்தீ நியூசிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

அறிமுகவீரர் அப்பாஸ் அப்ரிடியை வெளியேற்றிய போது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய 150வது விக்கெட்டை பதிவுசெய்து சாதனை படைத்தார் சவுத்தீ.

ரி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 சர்வதேச விக்கெட்டுகளை பதிவுசெய்த முதல் வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துக்கொண்டார்.

அவருக்கு அடுத்த இடங்களில்,

ஷாகிப் அல் ஹசன் – பங்களாதேஷ் – 140 விக்கெட்டுகள்

ரசீத் கான் – ஆப்கானிஸ்தான் – 130 விக்கெட்டுகள்

இஸ் சோதி – நியூசிலாந்து – 127 விக்கெட்டுகள்

லசித் மலிங்க – இலங்கை – 107 விக்கெட்டுகள்

Related Articles

Latest Articles