ரூ. 1700 – இன்றும் பேச்சு: முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சில் இன்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ், தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிந்த போதிலும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் பிரசன்னமாகவில்லை.

முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் இன்றைய கலந்துரையாடலுக்கு பிரசன்னமாகாமை தொடர்பில், நீதிமன்றத்திற்கு விடயங்கள் தெளிவூட்டப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிடுகின்றார்.

தொழிலாளர்களின் சம்பளத்தை அரசாங்கம் நிர்ணயித்து வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமையினால், அதனை நிறுவனங்களுக்கு மீற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

நிறுவனங்கள் வர்த்தமானி அறிவித்தலை மீறி செயற்படுகின்றமை மற்றும் கலந்துரையாடலுக்கு பிரசன்னமாகாமை குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என அவர் தெரிவிக்கின்றார்.

Related Articles

Latest Articles