பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைப்பது உறுதியாகியுள்ள நிலையில், அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பூண்டுலோயா பகுதியிலும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
பூண்டுலோயா பேர்லண்ஸ் தோட்ட நான்கு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்களும் ,சீன் தோட்ட தொழிலாளர்களும் தங்களது தோட்ட ஆலயங்களில் ஒன்று கூடி பூசை வழிப்பாட்டில் ஈடுப்பட்டனர்.
இந்த நிகழ்வுகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட பிரதிநிதி கே.ரமேஷ் குமார் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆ.ரமேஷ்
