மக்கள் படை திரட்டுகிறார் ரொஷான் ரணசிங்க! ஜனவரியில் அதிரடி வியூகம்!!

ஊழலுக்கு எதிராக மக்கள் இயக்கமொன்றை கட்டியெழுப்புவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.

இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்ற எனவும், ஜனவரியில் அமைப்பு உதயமாகவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஊழல் தலைவிரித்தாடுகின்றது என சுட்டிக்காட்டி, அதிரடியான சில நடவடிக்கைகளை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க முன்னெடுத்தார்.

அவரின் நடவடிக்கைகளால் ஆளுந்தரப்புக்கும், அவருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சு பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே புதியதொரு அரசியல் பயணத்தை அவர் ஆரம்பிக்கவுள்ளார்.

Related Articles

Latest Articles