லிந்துலையில் தற்காலிக குடியிருப்பில் தீ விபத்து – பொருட்கள் தீக்கிரை

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் திங்கட்கிழமை ( 14 ) காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த தீ விபத்தின் போது தெய்வாதீனமாக உயிர் சேதங்கள் மற்றும் தீ காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பதோடு, பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன

குறித்த வீட்டில் எரிவாயு கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related Articles

Latest Articles