லிந்துலை பொலிஸ் பிரிவில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளை!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ‘வலாக ஜனபதய’ எனும் பகுதியில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் இன்று (18) காலை வர்த்தக நிலையத்தை திறக்க வந்தபோது, வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டமை தெரியவந்ததுடன், அது தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வர்த்தக நிலையத்தின் மேல்மாடி ஊடாக இரண்டாவது நுழைவாயில் கதவின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள், அங்கிருந்த 80, 675 ரூபா பணம், தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் மற்றும் சிகரெட் பெட்டிகள் என்பன களவாடப்பட்டுள்ளன.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நுவரெலியா தடயவியல் பொலிஸாரோடு இணைந்து லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles