லிற்றோ கேஸ் விலை குறைப்பு

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலையாக 3,790 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோகிராம் நிறையுடைய லிற்றோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,522 ரூபாவாகும்.

2.3 கிலோகிராம் நிறையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 28 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 712 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles