லுணுகலை, ஹொப்டன் பிராந்திய வைத்தியசாலைக்குள் நேற்றிரவு புகுந்த திருடன், வைத்தியசாலையில் பெண் நோயாளர்கள் சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் தாதி ஒருவரின் பணம் மற்றும் கைத்தொலைபேசியை கொள்ளையடித்துச்சென்றுள்ளார்.
இரண்டு கை பைகளை அவர் திருடியுள்ளார். அவற்றில் 7 ஆயிரத்து 400 ரூபா இருந்துள்ளது.
திருடப்பட்ட பைகளில் ஒன்று வைத்தியசாலைக்கு வெகு தொலைவில் உள்ள பெட்டிக்கடைக்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜ்