“லெனின் மதிவானம் இளமை – புலமை- இனிமை” – நூல் வெளியீடு 31 இல்!

அமரர் லெனின் மதிவானம் நினைவாக தொகுக்கப்பட்டுள்ள ‘லெனின் மதிவானம் இளமை – புலமை- இனிமை எனும் நூல் வெளியீடு நாளை மறுதினம் 31ஆம் திகதி சனிக்கிழமை (31.12.2022) காலை 9.30 மணிக்கு சாஹித்ய ரத்னா மு. சிவலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

பாக்யா பதிப்பகத்தின் வெளியீடாக , நோட்டன்; வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், வரவேற்புரையை வாசகர் வட்டத்தின் தலைவரும், ஊடகவியலாளருமான மு.இராமச்சந்திரன் நிகழ்த்தவுள்ளார்.

பேராசிரியர் பால. சுகுமார், மல்லியப்புசந்தி திலகர், ஜே.சற்குருநாதன், சிராஜ் மஷ்ஹுர், சுமதி அன்பரசு, சிவ ஜேசு நேசன், ச.வில்சன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கவுள்ளனர். இந்நிகழ்வில், நன்றியுரையினை அமரர் லெனின் மதிவானனின் இளைய சகோதரரும் நீதிபதியுமான ஆர்.ஜே.ட்ரொட்ஸ்கி வழங்குவார்.

Related Articles

Latest Articles