மக்களின் வைப்புத் தொகையில் எவரும் கை வைக்க முடியாது என ஜனாதிபதியின் ஆலோசகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் தெளிவாக கூறியுள்ளதாகவும், எனவே, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எவரும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் அவர் கூறினார்.
வங்கி விடுமுறை வழங்குவது தொடர்பில் நாட்டில் தேவையற்ற கருத்தியல் உருவாக்கப்பட்டுள்ளதாக அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டினார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அஸ்வசும போன்ற திட்டங்களை அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் உள்ளடக்கக் கூடாது என தெரிவித்த காரியவசம், அனைத்தும் நியாயமான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.