வடக்க, கிழக்கு இணைப்புக்கு சில கட்சிகள் கொள்கை ரீதியில் ஆதரவு தெரிவிக்கின்றன. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
“நாம் ஒற்றையாட்சியை பாதுகாப்போம். மாகாணசபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமாட்டோம்.” – எனவும் நாமல் ராஜபக்ச மீண்டும் இடித்துரைத்துள்ளார்.
அத்துடன், அனைத்து மக்களினதும் மதம் மற்றும் கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, முதலீடு என்ற போர்வையில் தேசிய வளங்களை விற்பனை செய்யும் சூழ்ச்சி நடவடிக்கைக்கும் இடமளிக்கமாட்டோம் எனவும் நாமல் கூறியுள்ளார்.
