வடக்கிலிருந்து 17,555 மாணவர்கள் A/L பரீட்சைக்கு தோற்றம்!

வட மாகாணத்தில் 139 பரீட்சை நிலையங்களில் 17 ஆயிரத்து 555 பரீட்சாத்திகள் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என்று வடமாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை கல்வி கட்டமைப்பில் உயரிய பரிசாக கருதப்படும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் 15 ஆயிரத்து 156 பாடசாலை பரீட்சாத்திகளும் 2 ஆயிரத்து 399 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

ஆகவே பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்கள் நம்பிக்கையுடன் தோற்றி வெற்றி பெற வேண்டும் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles