வடக்கில் ஆட்டம் கண்டுள்ளது தமிழரசுக் கட்சி

வடக்கில் தமது கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து வருவதால் அரசாங்கத்துடன் இணைந்து அதனை தக்கவைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ மங்கள சமரவீரவுக்கும், சுமந்திரனுக்கும் நல்லுறவு இருந்தது. மங்கள ஜனாதிபதி ஆகி இருந்தால் சுமந்திரன் நிச்சயம் அமைச்சு பதவியை ஏற்றிருப்பார். இன்று மங்கள உயிருடன் இல்லை.

அடுத்தது சுமந்திரனுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சிறந்த நட்பு உள்ளது. இருவரும் இணைந்து செயற்படக்கூடியவர்கள்.
1960 காலத்துக்கு பின்னர் அவர்கள் (தமிழரசுக் கட்சி) அரசாங்கத்தில் அங்கம் வகிக்காததால் வடக்கில் அவர்களுக்குரிய வாக்கு வங்கி வீழ்ச்சியடைந்துவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2015 இல் 16 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. 2020 இல் அந்த எண்ணிக்கை 10 ஆக குறைந்தது. எனவே, அவர்களின் இருப்பு வீழ்ச்சியடைந்துவருகின்றது.

எனவே, அரசாங்க பலம்மூலம் அதனை தக்கவைத்தக்கொள்வதற்குரிய தேவைப்பாடு அவர்களுக்கு உள்ளது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles