“ வடக்கில் ஒன்றையும், தெற்கில் வேறொன்றையும் பேசி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நினைப்பது தவறு. நாட்டில் இன்று இனவதாம் இல்லை.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் , நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.
சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று பதுளையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே சாமர எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,
” ஸ்ரீமாபோதிக்கு அப்பால் சென்று வழிபடவேண்டாம் என ஜனாதிபதி கூறுகின்றார். வடக்கில் ஒன்றையும், தெற்கில் வேறொன்றையும் கூறி நாட்டை மாற்றலாம் என ஜனாதிபதி நினைக்கின்றார் போலும்.
நாட்டில் இன்று இனவாதம் என்பது வடக்கிலும் இல்லை, தெற்கிலும் இல்லை. எனவே, இரு வேறு பகுதிகளில் இருவேறு விதத்தில் கதைக்க வேண்டியதில்லை.
ரயில் வீதியில் விழுந்த மண்ணை அகற்றிவிட்டுகூட நிகழ்வு நடத்தும் நிலைதான் தற்போதைய ஆட்சியின்கீழ் காணப்படுகின்றது.
.” – என்றார்










