வடக்கில் தமிழராட்சி: இன்று முக்கிய சந்திப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்தில் நடை பெறவுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழ ரசுக் கட்சியின் சார்பில் அதன் பதில் தலை வர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன் னணி சார்பில் அதன் தலைவர் கஜேந் திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகி யோரும், பங்கேற்கவுள்ளனர்.

 

Related Articles

Latest Articles