மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியடைந்ததை நினைவுகூரும் வகையில் ‘மலையகம் 200’ நிகழ்வு, கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் வாழும் மலையக மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு ‘மலையகம் 200 – மாற்றத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நாம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், வடிவேல் சுரேஷ், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி சிவஞானம், மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன், ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் உமாசந்திரபிரகாஷ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
சர்வமதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மலையக குயில் அசானியும் கௌரவிக்கப்பட்டார்.
அதேவேளை, மறைந்த மலையக தலைவர்களும் நினைவுகூரப்பட்டனர்.
மறைந்த தேதிமுக நிறுவுனர் கேப்டன் விஜயகாந்துக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
படங்கள் – மு. தமிழ்ச்செல்வன்