வடக்கு மீனவர்களுக்குரிய கடல் வளத்தை பாதுகாப்போம்!

வடக்கு மீனவர்களுக்குரிய கடல் வளத்தை நிச்சயம் நாம் பாதுகாப்போம். எமக்குரிய கடல் வளத்தை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை. கைதுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ கடற்பரப்பில் எல்லைமீறல் என்பது சாதாரண விடயம். இரு தரப்பிலும் இது நடக்கலாம். இங்கு எல்லை தாண்டல் என்பது மட்டும் பிரச்சினை அல்ல, அவர்கள் (இந்திய மீனவர்கள்) மீன்பிடிக்காக பயன்படுத்தும் டோலர் படகுகள், கடல் வளத்தையும், சுற்றாடலையும் அழிக்கின்றன. எமது கடல் வளம் அழிக்கப்பட்டுவருகின்றது.

எனவே, இப்படியான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கைது செய்யுமாறு நாம் ஆலோசனை வழங்கியுள்ளோம். தற்போது சிறையில் 84 இந்திய மீனவர்கள் உள்ளனர்.

இந்திய பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின்போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடைமுறையை நிறுத்துவதற்கு தயார் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. வருகின்ற படகுகளை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்தாலும் எமது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே, கைது செய்யும் அளவை கடற்படையினர் அதிகரித்துள்ளனர்.

குறிப்பாக வடக்கில் உள்ள வளத்தை நாம் பாதுகாத்துக்கொடுக்காவிட்டால், எமது வளத்தை இந்த அரசு பாதுகாக்காது என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிடும். எனவே, நிச்சயம் நாம் அவர்களின் வளங்களை பாதுகாப்போம்.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles