நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட ஜனக ரத்னாயக்கவை பதவி நீக்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை ஐக்கிய மக்கள் சக்தி எடுத்திருந்தது.
எனினும், கட்சி முடிவுக்கு முரணான வகையில் பிரேரணைக்கு ஆதரவாக வடிவேல் சுரேஷ் வாக்களித்தார்.
இந்நிலையிலேயே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
