வட்டவளை, குயில்வத்த பகுதியில் கார்மீது முறிந்து விழுந்த மரம்!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, குயில்வத்த பகுதியில் பாரிய மரம் திடீரென முறிந்து விழுந்ததால் காரொன்று சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று (18) இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா பகுதியில் இருந்து திம்புள்ள பத்தன பகுதியை நோக்கி பயணித்த காரில் சாரதி மட்டுமே இருந்துள்ளார். அவருக்கு பாதிப்பு இல்லை என தெரியவருகின்றது.

வட்டவலை பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இனைந்து மரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தால் குறித்த வீதி ஊடான போக்குவரத்தும் சில மணிநேரம் தடைபட்டது.

சதீஸ்

Related Articles

Latest Articles