வரலாற்றில் இருந்து பாடம் படிப்போம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரது முகநூல் பதிவு வருமாறு,
“முதலாவது நிரந்தரமானது. இரண்டாவது வந்து போவது. சிலருக்கு இந்த அரசியல் விஞ்ஞானம் விளங்குவதில்லை.
வந்து போகும் அரசாங்க வரம் கிடைத்தவுடன் நாட்டுக்கு தாம் மாத்திரமே “நிரந்தர சொந்தக்காரர்” என நினைத்து விடுகிறார்கள்.
அதிலும் இனவாத சாயமும் சேர்ந்து விட்டால் நாடு நாசம்தான்.
இதற்குள் இத்தகைய அரசுக்குள் இடம்பிடித்து, குறுக்கு நெடுக்காக ஓடித்திரியும் சில (எல்லோரும் அல்ல.!) சிறுபான்மை குழந்தைகளின் இரைச்சல் தாங்க முடியாது.
பாராளுமன்ற தலைகளின் பெரும்பான்மை என்பதை மாத்திரம் கொண்டு எதையும் செய்து விடலாம் என்ற எண்ணம் பிழை.
1956ம் ஆண்டில் இப்படித்தான் “தாம் மட்டும்” என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள். அப்போதே ஒரு இடதுசாரி “இரண்டு என்றால் நாடு ஒன்று, அல்லது இரண்டு” என்றார். கேட்கவில்லை.
பின் ஏறக்குறைய நாடு இரண்டாகி, சொல்லொணா துன்பங்களை கண்டு, 75 வருடங்களாக இன்னமும் எழும்பி நிற்க முடியவில்லை.
ஆகவே அரசியல் விஞ்ஞானமும் படிப்போம். வரலாற்றில் இருந்து பாடமும் படிப்போம்.” – என்றுள்ளது.