காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிள பெற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன் – என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ வடமாகாணத்தில் இருக்கக் கூடிய மக்களுக்கு மிக மோசமான பின்னடைவை ஏற்படக்கூடிய ஆபத்திலிருந்து இந்த வர்த்தமானி வாபஸ்பெற வைத்தது பெரும ; வெற்றி என்றே செல்லவேண்டும்.
அந்த வகையில் பாராளுமன்றத்தில் இதனை கொண்டுவந்து பாரிய அழுத்தத்தை எற்படுத்துவதற்கு பலர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த அழுத்தங்களை வழங்காது விட்டால் இதனைச் செய்திருக்க முடியாது.
மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரும் எமக்கு பக்கபலமாக குரல் கொடுத்தார்கள். இதில் முக்கியமாக இந்த வர்தகமானி வாபஸ் பெறப்பட்டமையானது தமிழ்பேசும் மக்களாக நாங்கள் இணைந்து விவாதித்தது கூட்டு முயற்சியாக வெற்றியளித்தது . இதனைத் தமிழ் முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.’’ – என்றார்.