வளர்ப்பு மகளை தாக்கிய 39 வயதுடைய பெண் விளக்கமறியலில்

ராகம பிரதேசத்தில் தனது 17 வயதுடைய வளர்ப்பு மகளை உடல்ரீதியாக சித்திரவதை செய்த பெண்ணொருவர் 2023 மார்ச் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ராகம குருகுலேவ பிரதேசத்தில் உள்ள வீட்டில் வைத்து 39 வயதுடைய பெண் வளர்ப்பு மகளை தாக்கியுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யுவதி  பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மருத்துவ பரிசோதனைக்காக ராகமவில் உள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தையின் தாய் உயிரிழந்ததையடுத்து குழந்தையின் தந்தை மறுமணம் செய்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பெண் 09 வயதுடைய மகளின் தாய் எனவும், தந்தை வெளிநாட்டில் தொழில்புரிவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம குருகுலேவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து யுவதி  ஒருவர் தாக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதலின் வீடியோ காட்சிகளும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, காவல்துறை நடவடிக்கை எடுக்க தூண்டியது.

Related Articles

Latest Articles