பொகவந்தலாவ, புளியாவத்தை நகரத்தில் வழித்தவறி நாய்களால் துரத்தி தாக்கப்பட்டு சிக்கித்தவித்த மான்குட்டியொன்றை வளர்ப்பு நாயொன்று காப்பாற்றியுள்ள நெகிழச்சி சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்தவளர்ப்பு நாய், அதன் உரிமையாளருக்கு சைகை காண்பித்து மான் குட்டி இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது.
இதனையடுத்து உரிமையாளரும் , பிரதேச இளைஞர்களும் இணைந்து மான் குட்டியை மீட்டு, நீர் வழங்கி – நல்லத்தண்ணி வன விலங்கு அதிகாரிகளுக்கு தகவலை வழங்கி, மான் குட்டியை ஒப்படைத்தனர்.
தகவல் – S.Suganthan(BSc) SEUSL JP