வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, வவுனியா பிரதேசத்தைச் 22 வயதான குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
