இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துகளால் நாளாந்தம் 8 பேர்வரை உயிரிழக்கின்றனர் எனவும், 61 பேர் படுகாயம் அடைகின்றனர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக டிசம்பர் நத்தார் பண்டிகை காலப்பகுதியில் விபத்துகள் அதிகரிக்கின்றன எனவும், நாளொன்றுக்கு 14 பேர்வரை உயிரிழக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, வாகன விபத்துகளால் வருடாந்தம் 12 ஆயிரம் பேர்வரை உயிரிழக்கின்றனர் என சுகாதார பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.
