மூதூர் இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவிலுள்ள தபால் வாக்களிப்பு நிலையத்தில் அங்கு பணிபுரியும் சாரதி ஒருவர் வாக்குச் சீட்டை தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
தபால் வாக்குச்சாவடியில் சான்றிதழ் வழங்கும் அதிகாரியாக கடமையாற்றிய டிப்போ பிரதி முகாமையாளர் மொஹமட் ஹனிபா அன்வர் சதாத், மூதூர் பொலிஸில் முறைப்பாடு செய்ததன் பேரில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான சாரதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்ட மாஅதிபரின் பணிப்புரைக்கமைய அவரை பொலிஸ் பிணையில் விடுவிக்க மூதூர் பொலிஸார் ஏற்பாடு செய்தனர்.










