தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி நவம்பர் 14 ஆம் திகதி மாலை 4.15 இற்கு ஆரம்பமாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்தார்.
ஏனைய வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இரவு 7.15 மணியளவில் ஆரம்பமாகும் எனவும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
