‘வாருங்கள், கட்சியை பலப்படுத்துவோம்’ -வெல்கமவுக்கு சு.க. அழைப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு, சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அழைப்பு விடுத்துள்ளார்.

சுதந்திரக்கட்சியை மீட்கும் நோக்கில் புதிய கட்சியை குமார வெல்கம ஆரம்பிக்கவுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

” கூட்டு எதிரணி பக்கம் இருந்த வெல்கம, அதன்பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் தாவினார். தற்போது ஏதோவொரு கட்சியை உருவாக்கியுள்ளார். அவரால் தனியாக கட்சியை பலப்படுத்த முடியாது. எனவே, சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவதற்கு எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். எமது கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுள் அவரும் ஒருவர்.” – என்றும் தயாசிறி குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவதற்கு சுதந்திரக்கட்சி திட்டமிட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles