கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள பூர்வாரம போதிமலு விகாரையின் உண்டியலை உடைத்து பணத்தை களவாடினர் எனக் கூறப்படும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மதியம் 12.50 மணியளவிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத்திற்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த வாழைத்தோட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபர்களான பெண்கள் இருவரையும் கைது செய்து வாழைத்தோட்ட பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.










