திருகோணமலை விநாயகபுரம் பகுதியில் கும்பல் ஒன்று வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை திருடும் காட்சி ஒன்று அங்கிருந்த சிசிரிவி பாதுகாப்பு கமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.
நான்கு பேரைக் கொண்ட குழு ஒன்றில் மூன்றுபேர் வீதிகளில் காவல் பணிகளில் ஈடுபட ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை திருடுகின்ற சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற இன்றைய சூழலில் பலர் எரிபொருளை பதுக்கும் நடவடிக்கைகளிலும் அதிகமான விலைக்கு விற்பனை செய்கின்ற நடவடிக்கைகளிலும் தரித்து நிற்கின்ற வாகனங்களில் எரிபொருளை திருடுகின்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். குறிப்பாக போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள இளைஞர்கள் இதுபோன்ற திருட்டுச் சம்பவத்தில் அதிகம் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது.
