கம்பளை நகரில் பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூன்றரை வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
17 வயது பாடசாலை மாணவரொருவர் செலுத்திய ஜுப் வண்டி, ஆட்டோவொன்றுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கம்பளையில் இருந்து நாவலப்பிட்டிய பகுதிய நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஆட்டோமீதே, வேகமாக வந்த ஜுப் மோதியுள்ளது. இதனால் ஆட்டோ கவிழ்ந்துள்ளது. ஆட்டோ சாரதியும், அதில் இருந்த சிறுவனும் வெளியில் வீசப்பட்டுள்ளனர்.
காயமடைந்த இருவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், சிறுவன் உயிரிழந்துள்ளார். ஜுப் வண்டியை செலுத்திய வர்த்தகரொருவரின் மகன், கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.