கம்பளை, கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள வெளிகல்ல நகரில் மோட்டார் சைக்கில் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் தனியால் பல்கலை கழக மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
கம்பளை, கங்ஹத்த பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான ஓசத பண்டுல பண்டார அழகக்கோன் என்ற பல்கலைகழக மாணவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வெளிகல்ல பிரதேச நபரே காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
வியாழக்கிழமை (21) அதிகாலை இரண்டு மணியளவில் மேற்படி விபத்து இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பலியான மாணவன் கொழும்பிலிருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்ததாகவும் காயமடைந்த 55 வயது நபர் கொழுப்பிற்கு வேலைக்கு செல்வதற்காக பேராதனை புகையிரத நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இரு மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை தவுலகல பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கம்பளை நிருபர்