தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவியான சசி வீரவன்சவுக்கு ஈராண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீ ராகலவால், இன்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
போலியான தகவல்களை வழங்கி, இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.