விமான தபால் பொதிகளுள் இரண்டு கிலோ கொக்கெய்ன்

கொலம்பியாவிலிருந்து விமான தபால் சேவை மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொதிகளிலிருந்து 2 கிலோ 14 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த போதைப்பொருள், மின் உபகரணங்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு பொதிகளாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொக்கெய்ன் போதைப்பொருளின் சமார் 75 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles