அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்தும், அவற்றின் விலைகளை உடன் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் நாட்டில் பல பகுதிகளில் நேற்று தீப்பந்தம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பியின் ஏற்பாட்டால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில் ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஏற்பாட்டில் கொத்மலை, தவலாந்தென்ன நகரில் நேற்றிரவு தீப்பந்தம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பட்டதுடன், ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தினர்.
