வீடுகள் இழந்த எம்.பிக்கள் கடுப்பில்

மே – 9 ஆம் திகதி, வீடுகள் எரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்தவாரம் இடம்பெற்றது. சுமார் 74 எம்.பிக்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த எம்.பிக்கள் சிலர் தமது உள்ளக்குமுறல்களை வெளியிட்டுள்ளனர்.

“ ஒரே இரவில் எங்கள் வீடுகள் கொளுத்தப்பட்டன. ஆனால் இழப்பீடு பெறுவதற்கு எத்தனை கூட்டங்கள், கூட்டங்களில் பங்கேற்றே களைத்துபோய் விட்டோம், முடிந்தால் பணம் தரவும், இல்லையென்றால் இல்லையெனக் கூறவும்.” – என சில எம்.பிக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, எல்லாம் முறையாக நடக்க வேண்டும், இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு விசேட பிரதிநிதியொருவர் நியமிக்கப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவ்வேளையில் குறுக்கீடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் வஜீர, “ பொறுமையாக இருங்கள், இருந்ததைவிடவும் சிறப்பான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டு கடுப்பான எம்.பிக்களை குளிர்வித்துள்ளார்.

Related Articles

Latest Articles