பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் பிரெஞ்சு ப்ரைஸ் ஒன்றாகும்.
பிரெஞ்சுச் சமையல்காரா் ஒருவரால் கண்டறியப்பட்டதால், இது”ப்ரெஞ்ச் ப்ரைஸ்” எனப்பட்டதாக கூறப்படுகின்றது.
அதனை ஹேட்டல்களிலும், சில கடைகளிலும் பிரத்தியேகமாக செய்யப்படுகின்றது.
இருப்பினும் இதனை வீட்டில் இருந்து கூட எளிய முறையில் இதனை தயார் செய்ய முடியும். அந்தவகையில் தற்போது இதனை எப்படி தயாரிக்கலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு – 2 (பெரியது)
- உப்பு – சுவைக்கேற்ப
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
- முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும். அப்படி வெட்டும் போது உருளைக்கிழங்கு மிகவும் தடிமனாகவோ அல்லது மிகவும் மெல்லியதாகவோ இருக்காமல் பார்த்து வெட்டுங்கள்.
- பின் வெட்டிய உருளைக்கிழங்கை நீரில் ஒருமுறை அலசி விட்டு, குளிர்ந்த நீரில் 10-15 நிமிடம் ஊற வையுங்கள்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
- எண்ணெய் நன்கு சூடானதும், நெருப்பைக் குறைத்துவிட்டு, முதலில் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு நன்கு மொறுமொறுப்பாகும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளை டிஷ்யூ பேப்பரின் மேல் வைத்து, குளிர வைக்கவும். பின் அதன் மேல் உப்பு தூவி ஒருமுறை பிரட்டி விட்டால், சுவையான பிரெஞ்சு ப்ரைஸ் தயார். இதை தக்காளி சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்