அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
தனது இயலாமையை மூடிமறைப்பதற்காக ஊடகங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. இதற்காக ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
நாட்டில் போரை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு எதிராகவும் ஊடகங்கள் செயற்பட்டன. ஆனால் மஹிந்த ஊடகங்கள்மீது கைவைக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க அவர் ஊடகங்களை ஒடுக்க முற்படவில்லை.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிகாலத்தில் ஊடகங்கள் எவ்வாறு செயற்பட்டன? ஆனபோதிலும்கூட ஊடகங்களை சுதந்திரமாக செயற்பட இடமளித்தோம்.
இலங்கை மற்றும் இந்தியாவில்தான் ஜனநாயகம் சிறப்பாக உள்ளது. இந்நிலையில் இலங்கையை வடகொரியாவாக்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. அவ்வாறான முயற்சி எடுத்தால் அதற்கு எதிராக வீதியில் இறங்கி போராட தயார்.” – என்றார்.