வீதியை புனரமைத்து தருமாறுகோரி நானுஓயா , ரதெல்ல கீழ் பிரிவு தோட்ட மக்கள் இன்று காலை வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நானுஓயா ரதெல்ல கீழ் பிரிவு தோட்டத்தில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இத்தோட்டத்தில் இருந்து தலவாக்கலை செல்லும் இரண்டு கிலோமீட்டர் தூரம்கொண்ட வீதி பல வருட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகிறது.
இந்நிலையில் இப்பாதையை உடனடியாக சீரமைத்து தருமாறு கோரி இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை கவனீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கு மேற்பட்ட மக்கள் இதில் ஈடுபட்டனர்.
கடந்த அரசாங்கத்தில் 2020 ஆம் ஆண்டு புனரமைப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளை ஆரம்பிப்பதற் கு அடிக்கல் நடப்பட்டது. வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இடையில் கைவிடப்பட்டுள்ளது.
எனவே, இப்பாதையினை உடனடியாக புரனமைப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்