வெயில் காலத்தில் உடல் தூர் நாற்றத்தை போக்கும் வழிமுறைகள்

பெரும்பாலும் வெயில் காலங்களில் வியர்வையானது அதிகம் வெளியேறும். வியர்வை நாற்றம் வெளியேறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஹோர்மோன்களின் மாற்றங்கள், உண்ணும் உணவுகள் மற்றும் காலநிலை போன்றவை முக்கியமானவை. வியர்ப்பது என்பது ஒரு இயற்கை செயல் என்பதால், அதனை நிறுத்த முடியாது. வியர்வை வெளியேறாமல் இருந்தாலும், அது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். சொல்லப்போனால் வியர்வை துர்நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. உடலில் உள்ள பக்டீரியாக்கள் தான் அத்தகைய துர்நாற்றத்தை ஏற்படுத்துவின்றன. எனவே இத்தகைய வியர்வையினால் ஏற்படும் நாற்றத்தைப் போக்குவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. இவற்றை பின்பற்றி வந்தால் நிச்சயம், உடலில் இருந்து வெளியேறும் வியர்வை துர்நாற்றத்தை எளிதில் போக்கலாம்.

சவர்க்காரம்

வியர்வை துர்நாற்றத்தைப் போக்குவதற்கு சிறந்த வழியென்றால், துர்நாற்றம் வரும் இடங்களை
சவர்க்காரத்தை பயன்படுத்தி, நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

இதனால் வியர்க்கும் போது வெளிவரும் நீர் பக்டீரியாவுடன் சேர்ந்து ஏற்படுத்தும் நாற்றத்தைப் போக்கலாம்.

 

சுத்தமான ஆடைகள்

தினமும் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். அதிகமான அளவில் வியர்த்தால், அவர்கள் கோட்டன் ஆடைகளை அணிவது சிறந்தது. ஏனெனில் கோட்டன் வியர்வையை எளிதில் உறிஞ்சி, அதிலிருந்து வெளியேறும் நாற்றத்தை விரைவில் வெளியேற்றிவிடும்.

தேன்

குளித்து முடித்த பின், ஒரு டேபிள் ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, இறுதியில் உடலில் ஊற்றிக் கொண்டால், உடல் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.

அருகம்புல் சாறு

தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றை பருகி வந்தால், அதில் உள்ள குளோரோஃபில் வியர்வை நாற்றத்தைப் போக்கிவிடும்.

பேக்கிங் சோடா

குளித்த பின், சிறிது பேக்கிங் சோடாவை அக்குளில் தெளித்துக் கொண்டால், வியர்வை நாற்றமானது வெளிவராமல் இருக்கும்.

வெள்ளை வினிகர்

குளிக்கும் போது, வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அதனைக் கொண்டு அக்குளை கழுவினால், உடல் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

ரோஸ் வோட்டர்

உடல் துர்நற்றத்தைப் போக்குவதில் ஒரு சிறந்த வழியென்றால், அது ரோஸ் வோட்டர் பயன்படுத்துவது தான். அதிலும் குளிக்கும் நீரில், சிறிது ரோஸ் வோட்டர் சேர்த்துக் கொண்டு குளித்தால், உடலில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles