” எதிர்காலத்திலும் அரசியல் வெற்றிகளை பெறுவோம். நாட்டுக்கும், மக்களுக்கும் சிறப்பான சேவையை வழங்குவோம்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5ஆவது தேசிய மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் சவால்கள் காத்திருக்கின்றன, அவற்றை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அத்துடன், குரோத மனப்பான்மையை கைவிட்டு, அனைவருடனும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என அறிவித்து, பங்காளிக்கட்சிகளையும் அரவணைத்துக்கொண்டே பயணிப்போம் என்ற தகவலையும் அவர் வழங்கினார்.
