வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளோருக்கு விசேட ஓய்வூதியத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில வாரங்களில் இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் தயாரிப்பது தொடர்பில் வருடக் கணக்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இனியும் தாமதமின்றி அந்தத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தாம் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
