‘வெள்ளைப்பூடு மோசடியை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்க தயார்’

வெள்ளைப்பூடு மோசடியுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்தே ஒதுங்குவதற்கு தயார் – என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வெள்ளைப்பூடு மோசடியுடன் எனக்கு தொடர்பு இருக்கின்றது என அரசியல் நியமனம் பெற்றிருந்த ஒருவரே குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

நான் ஊழல், மோசடியில் ஈடுபடும் அரசியல்வாதி கிடையாது. எனவே. வெள்ளைப்பூடு மோசடியுடன் எனக்கு தொடர்பிருக்கின்றது என்பதை நிரூபித்தால் நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன்.

அதுமட்டுமல்ல இலங்கை அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடுவேன்.” என்றார் அமைச்சர் பந்துல குணவர்தன.

Related Articles

Latest Articles