வெள்ளைப்பூண்டு விவகாரம் : பம்பலப்பிட்டி வர்த்தகரின் மகன் கைது

சதொச வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் பம்பலப்பிட்டி தொழிலதிபர் ஒருவரின் மகன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மோசடிக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ கைது செய்யப்பட்டுள்ளார்.

54 ஆயிரம் கிலோ கிராம் வௌ்ளைப்பூண்டு கொள்கலன் இரண்டை மோசடியான முறையில் கொள்வனவு செய்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பம்பலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகரின் மகன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒரு கோடியே 17 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான இந்த மோசடிக்கு தேவையான போலியான ஆவணங்களை தயாரித்து உதவியமை குறித்து 25 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (23) வெலிசர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் 55 வயதுடைய பம்பலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் கடந்த 06 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles