வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட ஆற்றில் வினோதப் பயணம் சென்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் 22 வயதான தமித் குமார என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது, புலத்சிங்கள திவலகட பகுதியில் இடம்பெற்ற வெள்ள அர்த்தங்களை பார்ப்பதற்காக பிரதேச இளைஞர் குழு ஒன்று ஆற்றில் படகு ஒன்றில் ஏறி வினோதமாக சென்று கொண்டிருக்கையில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படகினை ஓட்டிச் சென்ற இளைஞர் தனது கையில் வைத்திருந்த மூங்கிலை உயர்த்தும்போது சக்தி வாய்ந்த மின்சாரக் கம்பி ஒன்றில் பட்டதால் அவர் ஆற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளார். அதன் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு மரணமடைந்துள்ளார்.
இதேவேளை அப்படகில் பயணித்த மேலும் 19 இளைஞர்கள் மின்சாரத் தாக்கத்துக்கு உட்பட்ட போதிலும் அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.