ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஜந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் உள்ளிட்ட ஐவரே யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒரு ஆணும்,
2 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒரு பெண்ணும்
80 மில்லி கிராம் ஹெரோயினுடன் மூன்று ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேக நபர்களிடம் நடத்தப்படும் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.










