0/L பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளிவரும்? அடுத்த வாரம் இறுதி முடிவு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் அடுத்த வாரத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்றுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நுண்கலை பாடத்திற்கான செயன்முறை பரீட்சை இதுவரை இடம்பெறவில்லை என்றும் அதன் காரணமாகவே க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தாமதமாவதாகவும் பரீட்சைகள்

ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார் . நாட்டில் தற்போது ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ள நிலையில் நுண்கலை செயன்முறைப் பரீட்சை நடத்துவதற்கு முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாவதாகவும் எவ்வாறெனினும் அடுத்த வாரத்தில் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles