07 ஆம் திகதி ‘மீன்பாடும் தேன் நாட்டில்’ கூடுகிறது தமிழரசுக்கட்சி!

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக – ஒற்றுமையாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றமையால் அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுப்பது என்று அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 07 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles