அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறியுள்ள நிலையில், இரட்டைப் பிரஜாவுரிமைகளையுடைய 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி இரத்தாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரட்டைப் பிரஜாவுரிமையைக் உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு 22 ஆவது திருத்தச்சட்டத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரட்டடைப்பிரஜாவுரிமையைக் கொண்டவர்கள் தமது பதவியை தாமே ராஜினாமா செய்வது சிறந்தது என எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் அரசில் உயர் பதவிகளை வகிக்கும் சிலருக்கும் இது அதற்கான வாய்ப்பாக உள்ளதாகவும் அவர்கள் அது பற்றி சிந்திக்க வேண்டிய காலமிது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.










