இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரை 435 கொலைகள் பதிவாகியுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.
“செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த 9 மாத காலப்பகுதியில் இந்தக் கொலைகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு முழுவதும் 521 கொலைகள் மட்டுமே பதிவாகியுள்ளன” என்றும் அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், பிரேத பரிசோதனைகளை நடத்துவது தொடர்பான குற்றவியல் நடைமுறைகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.










